பலஸ்த்தீனை தனி நாடாக ஏற்க கனடா மற்றும் பிரித்தானியா முடிவு
பலஸ்தீன் நாட்டின் தலைவர் மகமுத் அப்பாசுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் பலஸ்தீனில் தேர்தல் நடாத்துவது மற்றும் சில முற்போக்கான விடயங்களை அமுல்படுத்த ஒத்துகொன்டதை அடுத்து பலஸ்தீனை தனி நாடாக ஏற்க உள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்திருந்தார். அத்தோடு தற்போது காசாவில் நிலவும் நிலையினை கருத்தில் கொண்டு ஈஸ்ராயில் போர்நிறுத்தத்தை மேற்கொள்ளாவிடின் பலஸ்தினை தனி நாடாக ஏற்பதாக பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் அறிவித்திருந்தது. தற்போது 193 நாடுகளில் 140 நாடுகள் பலஸ்தீனை தனி நாடாக ஏற்றுக்கொண்டுள்ளன.
