“ட்ரம்ப்” இனை கொலை செய்ய முயற்சித்த நபர் குற்றவாளி என ஜூரி சபை தீர்மானம்

கடந்த வருடம் “ட்ரம்ப்” இனை அவரினது “கோல்ப்” மைதானத்தில் கொலை செய்ய முயற்சித்த ரயன் ரவுத்(Ryan Routh) குற்றவாளி என 7 பேர் கொண்ட ஜூரி சபை மூலம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனது கழுத்தினை பேனை ஒன்றினால் குத்தி தற்கொலை செய்ய முற்பட்டிருந்தார். உடனடியாக செயற்பட்ட நீதிமன்ற அதிகாரிகள் அவரினை நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றினர். ரயன் ரவுத் இலக்கமில்லாத துப்பாக்கி வைத்திருந்தமை, ட்ரம்ப்இனை கொலை செய்ய முயற்சித்தமை ஆகியவற்றிற்கு குற்றவாளியாக தீர்மானிக்கபட்ட்டார்.

Read More

ஹிமாலய மலைத்தொடரில் நிகழ்த்திய புகை குண்டு காட்சியின் பின் சர்ச்சை

ஆர்க் ‘டேரிக்ஸ் (Arc’teryx) எனும் உடை தயாரிப்பு நிறுவனம் ஹிமாலய மலையின் திபெத் பகுதியில் புகை குண்டுகளை உபயோகித்து ஒரு dragon ஒன்றினை உருவாக்கியிருந்தது. இது அந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மையை மக்கள் நிராகரிக்கும் வகையில் அமைந்துள்ளதோடு, இதனை அடுத்து சீனா இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவால் மக்கள் அந்த தயாரிப்பை புறக்கணிக்கும் தன்மை உருவாகியுள்ளது. இதனையடுத்து அந்த நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.

Read More

பேருவில் ஜென் Z போராட்ட ஆரம்பம்

நிதி மோசடி மற்றும் ஓய்வுதிய குறைப்பு போன்ற காரணங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரு நாட்டின் லீமா நகரை பல இளைஞர், யுவதிகள் சுற்றிவளைத்துள்ளனர். ஜனாதிபதி டினா போலேர்டோவின் அரசிற்கு எதிராக Generation Z குழுவினரோடு மக்களும் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளதகா தெரிவிக்கபடுகிறது.

Read More

அயர்லாந்து ராப் பாடகர் குழுவிற்கு கனடாவிற்கு வர தடை

அயர்லாந்தின் Kneecap ராப் பாடகர் குழு கனடாவில் இசை நிகழ்வொன்றில் பங்கேற்க எதிர்பார்த்திருந்த நிலையில் கனடா அரசானது அவர்களை அந்நாட்டிற்கு வருகை தருவதை தடை செய்துள்ளது. இந்த குழுவினர் காசாவினை மையமாக கொண்டு இயங்கும் ஹமாஸ் இயக்கத்திற்கு சார்பான கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படுவதோடு இதனால் இந்த பாடகர் குழு தமது நாட்டிற்கு வருவதை தடை செய்வதாக கனடா அறிவித்திருக்கின்றது.

Read More

பலஸ்தீன ஜனாதிபதி வீடியோ அழைப்பின் மூலம் ஐ.நா வின் வருடாந்த பொதுக் கூட்டத்தினை பங்கேற்க அனுமதி

எதிர்வரும் வாரத்தில் நடைபெற இருக்கும் ஐ.நா வின் வருடாந்த பொதுக் கூட்டத்தினை பங்கேற்க எதிர்பார்த்திருந்த பலஸ்தீன ஜனாதிபதி மஹ்முத் அப்பாஸ்(Mahmoud Abbas) இன் ஐக்கிய அமெரிக்காவிற்கான பயணத்தின் விசாவினை வழங்க நிராகரிக்க அந்நாடு தீர்மானித்தது. இதனையடுத்து அவருடைய பங்கேற்பிற்கு வீடியோ அழைப்பின் மூலம் உரையாற்ற வழங்கும் தீர்மானம் 145 வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டது.

Read More

விளையாட்டுகளில் இருந்து ஈஸ்ராயிலை ஒதுக்குமாறு ஸ்பெயின் வலியுறுத்தல்

யுக்ரேன் யுத்தத்தினை மையமாக கொண்டு ருசியாவினை விளையாட்டுகளில் இருந்து ஒதுக்கியது போன்று ஈஸ்ராயிளினையும் ஒதுக்குமாறு ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சஞ்செஸ் (Pedro Sánchez) உலக விளையாட்டு மாநாடுகளில் வேண்டுகோள் விடுத்துள்ளார். ருசியா யுக்ரேனை ஆக்கிரமித்து போன்று ஈஸ்ராயில் காசாவில் தொடர்ந்து மேற்கொள்ளும் போர் நடவடிக்கைககள் காரணமாக இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை நிருத்தும்வரை ரஷ்யா, ஈஸ்ராயில் போன்ற நாடுகளினை விளயாட்டுகளில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

Read More

நேபாளத்திற்கு முதல் முறையாக பெண் சட்டமா அதிபர்

நேபாளத்தின் சிரேஷ்ட வழக்கறிஞரான சபித பண்டாரி (Sabita Bhandari) நேபாளத்தின் முதலாவது பெண் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னால் சட்டமா அதிபர் ரமேஷ் பதால் அந்நாட்டின் கடந்த கே.பி.ஷர்மா ஓளியின் அரசின் வீழ்ச்சியின் பின்னர் பதவி விலகியதால் வெற்றிடமான சட்டமா அதிபர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

எமீ விருது பெற்ற இளைய நடிகராக Owen Cooper தெரிவு

அமெரிக்காவில் இடம்பெறும் 77வது (Emmys ) எமீ விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த துணை நடிகராக அடூலன்சில்(Adolescence) நடித்த ஓவன் கூப்பர் (Owen Cooper ) தெரிவானதோடு எமி விருது பெற்ற இளைய நடிகராக தடம் பதித்தார். இந்த விருது வழங்கும் நிகழ்வில் புனைகதை பிரிவில் சிறந்த துணை நடிகை விருதை எரின் டோஹெர்ட்டி (Erin Doherty) பெற்றார். நகைச்சுவை நாடக பிரிவில் சிறந்த துணை நடிகையாக ஹன்னா எயன்பர்க் ( Hannah Einbinder) ம் , சிறந்த…

Read More

ட்ரம்ப் ஜனாதிபதியின் நண்பனின் கொலையாளி கைது

அமெரிக்க ஜனாதிபதி டானல்ட் ட்ரம்ப்பின் நண்பனான சார்லி கார்க்(Charlie Kirk) கடந்த வாரம் துப்பாக்கிதாரி ஒருவரினால் கொலை செய்யபட்டிருந்தார். இவர் கொன்சர்வேடிவ் கட்சியின் பிரதான உறுப்பினரும் ஆவார். இவர் 2012ம் ஆண்டு ஆரம்பித்த “அமெரிக்காவின் திருப்புமுனை” (Turning Point USA -TPUSA) அமைப்பின் தலைமை நிருவாகியுமாவார். இவரினை கொலை செய்த சந்தேகநபரான 22 வயது டெயிலர் ரொபின்சன்(Tyler Robinson) தனது தந்தையால் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சார்லி கார்க் “அமெரிக்காவின் திருப்புமுனை” அமைப்பின் மூலம் பிரசித்தி பெற்றிருந்தாலும் அவர்…

Read More

உலகின் வேகமான மனிதன்-ஜமைக்காவில்

ஜப்பானில் டோக்யோ நகரில் இடம்பெறும் உலக மெய்வல்லுனர் 2025 ம் வருட போட்டியின் போது 100 மீட்டர் பெண்கள் ஓட்டபோட்டியில் அமெரிக்க மெலிசா வுடன்(Elissa Jefferson-Wooden) 10.61 செக்கன்களில் போட்டியை முடிவு செய்தார். இந்த நேரமானது 100 மீட்டர் பெண்கள் ஓட்டபோட்டி வரலாற்றில் நான்காவது குறைந்த நேரமாக கருதபடுகிறது. அதேநேரத்தில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்ட போட்டியில் ஜமைக்காவின் ஒபிளிக் செவில் (Oblique Seville) 9.77 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து 2025 ம் வருட உலக…

Read More