ஒருநாள் கிரிக்கட் போட்டியில் அதிவேக 5000 ஓட்டங்களை பெற்ற இந்தியர் என்ற சாதனை மந்தனா கடந்தார்
இந்திய வீரர் ஒருவர் அதி குறைந்த ஒருநாள் போட்டிகளில் 5000 ம் ஓட்டங்களை பெற்ற சாதனையை இந்திய பெண்கள் கிரிக்கட் அணியின் ஸ்மித்ரி மந்தனா கடந்த பெண்களுக்கான உலக கோப்பை போட்டியில் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் கடந்தார். இவர் இந்த சாதனையை நிகழ்த்த 112 ஒருநாள் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார். இதற்கு முன்னர் இந்த சாதனை 114 போட்டிகளில் விராட் கோலி ,118 போட்டிகளில் சிக்கர் தவான் ஆகியோர் அடைந்திருந்தனர்.
