லுவ்றி நூதனசாலையில் இடம்பெற்ற திருட்டின் சந்தேக நபர்கள் கைது

பாரிஸ் நாட்டின் லுவ்றி (Louvre) நூதனசாலையில் இடம்பெற்ற நகை மற்றும் நூறு வருடத்திற்கும் பழமையான நூதன பொருட்கள் திருட்டின் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த திருட்டின் போது 100 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியானவையும், 19 ம் நூற்றாண்டிற்கு உரித்தான இராணி மாரி-அமேலி (Marie-Amélie) மற்றும் ஹோர்ட்டேன்சே(Hortense) இராணிகளின் விலைமதிப்பற்ற கற்கள் பதிக்கப்பட்ட மோதிரம் மற்றும் வேறு தங்க நகைகள் கலவாடபட்டுள்ளது.

Read More

உலகின் வயது முதிர்ந்த ஜனாதிபதியாக கமரோன் நாட்டின் Paul Biya தேர்வு

அண்மையில் இடம்பெற்ற கமரோன் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று 92 வயதான பவுல் பியா (Paul Biya) உலகின் வயது முதிர்ந்த ஜனாதிபதியாக தெரிவானார். இவரினது ஆட்சி காலம் முடிவடையும் போது அவரிற்கு 99 வயதாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

Read More

அயர்லாந்தின் ஜனாதிபதியாகிறார் கதரின் கனொளி

இடதுசாரியான கதரின் கனோலி(Catherine Connolly) அயர்லாந்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியாக தேர்வாகியுள்ளார். இவர் பைன் காஎல் (Fine Gael) கட்சியின் ஹீதர் ஹும்ப்ரேயை (Heather Humphreys ) 63% வெற்றிபெற்றார். இவர் எதிர்வரும் கிழமையில் டப்ளின் மாளிகையில் அயர்லாந்தின் பத்தாவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார். இதேவேளை தற்போதைய ஜனாதிபதி (Michael D Higgins) கனோளியின் வெற்றியிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Read More

கிழக்கு திமோர் ASEAN அமைப்பில் இணைவு

தென்கிழக்கு ஆசிய ஒன்றியமான ASEAN அமைப்பில் கிழக்கு திமோர் இணைந்துள்ளது. 1990 இற்கு பின்னர் நாடாக கிழக்கு திமோர் பதிவாகின்றது. அதற்கமைய ASEAN அமைப்பின் நடைபெறும் மாநாட்டில் மற்றைய பத்து அங்கத்துவ நாடுகளுடன் கிழக்கு திமோரின் கொடியும் மேடையில் ஏற்றபட்டிருந்தது என ஊடகங்கள் தெரிவித்தன. ” இன்று வரலாறு புதுப்பிக்கப்பட்டது ” என கிழக்கு திமோர் பிரதமர் சானாஸ் குஸ்மாவோ (Xanana Gusmao) தெரிவித்தார். மேலும் அமெரிக்க ஜனாதிபதி இந்த மாநாட்டிற்கு கலந்துகொள்ள சமூகமளித்த போது கம்போடியா…

Read More

சிறுவர்களுக்கான புனைகதையிற்கான புக்கா் பரிசு வழங்க தீர்மானம்

சிறுவர்களுக்கான புனைகதையிற்கான புக்கா் பரிசு வழங்க AKO தொண்டு நிறுவனம் தீர்மானித்துள்ளது.இதற்காக 50,000 பவுண்ட் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளதோடு இதுவரை காலமும் புக்கர் பரிசு மற்றும் சர்வதேச புக்கர் பரிசு மாத்திரமே வழங்கப்பட்டு வந்தது. ஆங்கில இலக்கியத்தில் மிக உயரிய பரிசாகக் கருதப்படும் புக்கா் பரிசு கடந்த 1969-ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது. இதைத்தொடா்ந்து, சா்வதேச புக்கா் பரிசு 2005-ஆம் முதல் வழங்கப்படுகிறது. இந்நிலையில், சிறுவர்களுக்கான புத்தங்கள் பிரிவில் புதிய பரிசை புக்கா் பரிசு அடுத்த வருடம் முதல்…

Read More

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஆசியான் மாநாடு மலேசியாவில்

47 வது தென்கிழக்ஆசிய நாடுகளின் ஆசியான்(ASEAN) மாநாடு மலேசியாவில் அந்நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராக்ஹீம் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கு அமெரிக்கா,சீனா,இந்தியா உற்பட மேலும் பல நாடுகள் கலந்துகொள்ளவுள்ளது. இதன்போது அமெரிக்க ஜனாதிபதி கட்டாயமாக கலந்துகொள்ளவுள்ளதோடு இந்த பயணத்தின் பின்னர் அவர் சீனா செல்லவும் திட்டமிட்டுள்ளார். இந்திய பிரதமர் தன்னால் இம்மாநாடு இடம்பெறும் க்வலாலம்பூர்ற்கு செல்ல முடியாமல் இருப்பதாகவும் அவர் இணைய வழி மூலம் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாக தனது எக்ஸ் தலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Read More

2025 ம் ஆண்டிற்கான அமெரிக்காவின் அழகு இராணி தெரிவு

74 ம் தடவையாக இடம்பெறும் இவ்வருடத்திற்கான அமெரிக்க அழகு இராணி போட்டியின் போது அமெரிக்காவின் நெப்ரஸ்க ஆட்ரே எகெர்ட் (Nebraska Audrey Eckert) “மிஸ் யு.எஸ்.ஏ” பட்டத்தினை பெற்றார். இப்போட்டி அமெரிக்காவின் நெவாடோ பிராந்தியத்தின் ரேனோவில் இடம்பெற்றது. இவரிற்கான முடிசூட்டலினை அகில உலக அழகியான டென்மார்க்கின் விக்டோரியா கஜேர் தெய்ல்விக் ( Victoria Kjær Theilvig) சூட்டினார் .

Read More

பேருவின் தலைநகரிற்கு அவசரகால பிரகடனம்

தொடர்ந்து பேருவில் இடம்பெற்ற பதற்ற நிலைமையினை அடுத்து அந்நாட்டின் முன்னால் ஜனாதிபதி டினா போலறுட்(Dina Boluarte) பதவி நீக்கப்பட்டு 38 வயதான ஜோஸ் ஜெரி (José Jerí) ஜனாதிபதியாக பதவியேற்றார். பேருவின் முதல் பெண் ஜனாதிபதியான டினா போலறுட் 2022ம் வருடம் ஜனாதிபதியாக பதவியேற்றதோடு அவருடைய காலப் பகுதியில் இடம்பெற்ற பண சுத்திகரிப்பு மற்றும் ஊழல்கள் காரணமாக நாட்டில் தொடர்ந்தும் கிளர்ச்சிகள் ஏற்பட்ட வண்ணம் இருந்தது. அத்தோடு நாட்டினுள் இடம்பெற்ற குற்ற செயல்களை தடுக்கவும் அவரின் ஆட்சி…

Read More

மடகஸ்காரில் இராணுவ ஆட்சி

z-தலைமுறையின் போராட்டத்தின் பின்னர் மடகஸ்காரில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக அந்நாட்டின் ஜனாதிபதி அன்ரி ரஜோளினா (Andry Rajoelina) தனது பதவியை விட்டு நாட்டில் இருந்து வெளியேறி இருந்தார். இதனையடுத்து அந்நாட்டின் இராணுவம் ஆட்சியை தன் வசம் எடுத்ததோடு அரச நிறுவனங்களின் செயற்பாட்டினை நிறுத்தியது. இதனையடுத்து மடகஸ்கர் இராணுவம் அடுத்த இரு வருடங்களுக்கு ஆட்சி மேற்கொள்வதாக அறிவித்துள்ளது. இதற்கு z-தலைமுறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு ஐநா, மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் இந்த முடிவை எதிர்த்துள்ளது. இராணுவ விசேட அதிரடி படையின்…

Read More

“டைடன்” மூழ்க காரணம் கண்டறியப்பட்டது

கடந்த 2023ம் ஆண்டு டைட்டானிக் கப்பலின் எச்சங்களை ஆராய கடலிற்கு அடியில் சென்ற டைடன் நீர்மூல்கி கப்பல் விபத்துக்குள்ளானது. இதன்போது அந்த நீர்மூல்கி கப்பலினை உருவாக்கிய ஓஷன் கேட்(OceanGate) நிறுவனத்தின் தலைமை நிருவாக அதிகாரியான ஸ்டாக்டன் ரஷ்(Stockton Rush) உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து ஏற்பட்டமை மர்மமாக காணப்பட்டதோடு தற்போது இந்த விபத்து தொழினுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த விபத்தினை அடுத்து ஓஷன் கேட் நிறுவனம் அனைத்து தமது செயற்பாடுகளையும்…

Read More