T20 போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரராக பாபர் அசாம்
இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்ற துடுப்பாட்ட வீரர் எனும் ரோஹித் சர்மாவின் சாதனையினை கடந்த தென்னாப்ரிக்காவிற்கான போட்டியில் பாபர் அசாம் முறியடித்தார். பாபர் அசாம் 123 போட்டிகளில் பங்குபற்றி 4,234 ஓட்டங்கள் பெற்றுள்ளதோடு, இதுவரை முன்னிலையில் இருந்த இந்திய வீரரான ரோஹித் ஷர்மா 153 போட்டிகளில் பங்குபற்றி 4,231 ஓட்டங்களுடன் இரண்டாமிடத்திலும், மூன்றாமிடத்தில் விராட் கோலி 117 போட்டிகளில் பங்குபற்றி 4,188 இடம்பிடித்துள்ளனர்.
