நேபாளத்திற்கு புதிய பிரதமர்

கடந்த சில நாட்களாக நேபாளத்தில் காணப்பட்ட மக்கள் போராட்டத்திற்கு பின்னர் அந்நாடு இராணுவ கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டுவரப்பட்டது. இந்த போராட்டமானது ஜென் Z போராட்டம் என அழைக்கபட்டதோடு (Gen Z protest) அந்நாட்டின் ஊழல், வாரிசு அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களை முடக்கல் போன்ற காரணிகளால் அந்நாட்டு இலைஞர்கள் மற்றும் பொது மக்களால் ஆராம்பிக்கபட்டிருந்தது. இதன்போது ஐம்பதிற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு அந்நாட்டின் பாராளுமன்றம், உட்பட பல அரச கட்டிடங்கள் தீக்கிரையாக்கபட்டது . சிறைச்சாலை கைதிகள் 54 பேர்…

Read More

பிரான்சின் புதிய பிரதமராக மேக்ரோனின் நண்பனின் பெயர் முன்மொழிவு

நம்பிக்கையில்லா பிரேரணையின் 24 மணித்தியாலத்திற்கு பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தனது நண்பனான செபஸ்தியன் லேகொர்னு (Sébastien Lecornu) வை பிரான்சின் இரு வருடங்களில் தெரிவான 5 வது பிரதமராக முன் மொழிந்துள்ளார். 39 வயதான லேகொர்னு பிரான்சின் பாதுகாப்பு அமைச்சராக கடைமயாற்றியிருந்தார். இவரிற்கு முன்னதாக பயொரு (Bayrou) பிரான்ஸ் பிரதமரக கடமையாற்றியிருந்தார். பிரான்சு பாராளுமன்றத்தில் 3 பிரிவுகள் காணப்படுவதோடு மக்ரோணிற்கு பெரும்பான்மை இன்மையே இந்த அரசியல் தடுமாற்றத்திற்கு காரணமாகும். இதனால் பல தடவை மக்ரோணிற்கு…

Read More

ஜப்பானிய பிரதமர் இராஜினாமா

ஜப்பானிய பிரதமர் சிகேரூ இஷிபா (Shigeru Ishiba) தமது லிபரல் கட்சியில் பிழவு ஏற்படுவதை தடுக்க தமது பிரதம பதவியினை இராஜினாமா செய்துள்ளார். இவர் 2024ம் ஆண்டு தொடக்கம் பிரதமர் பதவியில் இருப்பதோடு இவரின் காலத்தில் ஜப்பானிய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது என மக்கள் கோபமடைந்த நிலையில் இவரின் லிபரல் ஜனநாயக கொமேய்டோ கூட்டணி உயர் மற்றும் கீழ்மட்ட அமைச்சரவை பெரும்பான்மையை இழந்தது.

Read More

பலஸ்த்தீனை தனி நாடாக ஏற்க கனடா மற்றும் பிரித்தானியா முடிவு

பலஸ்தீன் நாட்டின் தலைவர் மகமுத் அப்பாசுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் பலஸ்தீனில் தேர்தல் நடாத்துவது மற்றும் சில முற்போக்கான விடயங்களை அமுல்படுத்த ஒத்துகொன்டதை அடுத்து பலஸ்தீனை தனி நாடாக ஏற்க உள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்திருந்தார். அத்தோடு தற்போது காசாவில் நிலவும் நிலையினை கருத்தில் கொண்டு ஈஸ்ராயில் போர்நிறுத்தத்தை மேற்கொள்ளாவிடின் பலஸ்தினை தனி நாடாக ஏற்பதாக பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் அறிவித்திருந்தது. தற்போது 193 நாடுகளில் 140 நாடுகள் பலஸ்தீனை தனி நாடாக ஏற்றுக்கொண்டுள்ளன.

Read More

ஈஸ்ராயில் ஈரான் இடையிலான யுத்தத்தின் பின்னணி

1979 இற்கு முன்னர் ஈஸ்ராயில் ஈரான் இடையில் காணப்பட்ட நட்புறவு ஈரானியப் புரட்சிக்கு முன்னர் , இஸ்ரேலும் ஈரானும் மூலோபாய நட்பு நாடுகளாக இருந்தன.ஷா முகமது ரெசா பஹ்லவியின்(Shah Mohammad Reza Pahlavi) கீழ் ஈரான், இஸ்ரேலை அங்கீகரித்த முதல் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் ஒன்றாகும்.இரு நாடுகளும் பொருளாதார மற்றும் இராணுவ ஒத்துழைப்பைக் கொண்டிருந்தன, குறிப்பாக எண்ணெய் மற்றும் ஆயுதத் துறையில். 1979 இஸ்லாமியப் புரட்சியுடன் ஏற்பட்ட மாற்றம் இஸ்லாமியப் புரட்சி அப்போதைய தலைவர் ஷாவைத் தூக்கியெறிந்து…

Read More

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா தமது நாட்டின் சமாதான பேச்சுவார்த்தையில் பங்குபெறும் என செலன்ச்கி எதிர்பார்ப்பு

யுக்ரேனிய ஜனாதிபதி வோல்டிமையர் செலன்ச்கி(Volodymyr Zelenskiy) தமது நாட்டிற்கும் ருசியாவிற்கும் இடையில் காணப்படும் யுத்தத்தினை முடிவிற்கு கொண்டு வருவதற்கான சமாதான பேச்சுவார்த்தையில் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா பங்கேற்கும் என எதிர்பார்பதாக கூறினார். அமெரிக்க புதிய ஜனாதிபதி ட்ரம்ப் உக்ரேனிய ரசிய போர் பற்றி ரசிய ஜனாதிபதியுடன் கலந்துரையாட உத்தேசித்துள்ளதாக கூறியிருந்த நிலையில் ரசிய ஜனாதிபதி புடின் அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து இவ்விடயதினை கலந்துரையாட வேண்டும் எனக்கூரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Read More

காசாவில் போர் நிறுத்த இஸ்ரேலிய அமைச்சரவையும் இணக்கம்

நீண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் காசாவில் போர் நிறுத்த இஸ்ரேலிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் ஹமாஸ் இயக்கம் போர் நிறுத்த இணக்கம் தெரிவித்த நிலையில் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் காசாவில் இருக்கும் பணயக் கைதிகளை தேடி 630 உதவும் கனரக வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த 15 மாதங்களாக இந்த போர் இடம்பெற்று வருகின்றது.

Read More

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் சத்தியப்பிரமாணம்

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டானல்ட் ட்ரம்ப் பதவியேற்றார். இவர் தனது இரண்டாம் பதவிக்காலத்தினை இவ்வாறு ஆரம்பிப்பதோடு இந்த பதிவியை ஏற்கும் போது பல தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். *மெக்ஸிகோ வளைகுடா மற்றும் பனாமா கால்வாய் போன்றவற்றை மீண்டும் அமெரிக்க கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரல் * எல்லை பிரைச்சினைகளை தீர்த்தல் . *ஆண் பெண் என இரு வர்க்கம் மாத்திரமே காணப்பட வேண்டும். *சக்தி கொள்கையை வலுப்படுத்தல். *பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து வெளியேறல். போன்றவை பிரதானமாக சுட்டிக்காட்டபட்ட்து.

Read More

தமது நாட்டில் இருந்து பிரான்சு படையினரை வெளியேறுமாறு ஐவரி கோஸ்ட் கோரிக்கை.

ஆபிரிக்காவின் மீதான பிரான்சின் இராணுவ ஆட்சியை எதிர்க்கும் போக்கின் விளைவாகவே ஐவரி கோஸ்ட் அந்த வரிசையில் புதிதாக இணைந்துகொண்ட மேற்கு ஆப்ரிக்க நாடுகளின் ஒன்றாக அமைகிறது. அந்நாட்டின் ஜனாதிபதி Alassane Ouattara தனது வருட இறுதி உரையில் இந்த வெளியேறல் இவ்வருட ஜனவரி முதல் இடம்பெறும் என தெரிவித்தார். கடந்த இரு வருடங்களுள் ஏற்பட்ட பிரான்சு எதிர்ப்பு காரணமாக மாலி,புர்கினோ பாஸோ, நைகர் உள்ளடங்கலாக பல மேற்கு ஆப்ரிக்க நாடுகள் பிரான்சினை வெளியேற்றியது. அண்மையில் செனஹல், செட்(Senegal, chad)…

Read More

ரசியாவின் எரிவாயு யுக்ரேன் ஊடாக ஐரோப்பா செல்லும் மார்க்கத்திற்கு தடை

ஐரோப்பாவிற்கு யுக்ரேன் ஊடாக குழாய் வழியே சென்ற ரசியாவின் எரிவாயு இனிமேல் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. யுக்ரேன் உடனான ஒப்பந்தம் 2019 ம் ஆண்டு முடிவடைந்த நிலையில் இந்த ஊடுகடத்தல் 2025 ம் ஆண்டு ஜனவாரி மாதத்தில் இருந்து நிறுத்தபட்டுள்ளது. ரசியாவின் அந்நிய நாடுகள் மீதான தலையீட்டின் காரணமாக யுக்ரேன் ரசியாவின் எரிவாயு கொள்வனவு செய்வதை 2015ம் ஆண்டு தொடக்கம் நிறுத்தி இருந்தது. இது ரசியா கிறிமியா நாட்டினை தன்னுடன் இணைத்து கொண்டதன் பின்னராகும். *பாதிப்படையும் நாடுகள்…

Read More