கென்யாவின் முன்னால் பிரதமர் காலமானார்

கென்யாவின் முன்னால் பிரதமரான ரய்லா ஒடிங்கா(Raila Odinga) தனது 80வது வயதில் இந்தியாவில் காலமானார். இவர் இந்தியாவிற்கு வருகைதந்திருந்த போது ஏற்பட்ட திடீர் நிலைமையில் காலமானதோடு இவரின் பூதவுடல் கென்யாவின் தலைநகரான நைரோபியிற்கு கொண்டு செல்லப்பட்டது. இதன்போது இவரின் பூதவுடலை காண பெருந்திரளான மக்கள் கூடியதன் காரணமாக அந்நாட்டு பொலிசாரினால் கண்ணீர் புகை மற்றும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பலர் காயமடைந்தனர். ரய்லா ஒடிங்கா கென்யாவின் மிகவும் முக்கியமான அரசியல் பிரமுகவராவர். இவர் பல வருடங்களாக…

Read More

இவ்வருட சமாதானத்திற்கான நோபல் பரிசு மரியா கொரினோ மச்சாடோவிற்கு

2025-ம் ஆண்டுக்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு வெனுசுலாவினை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் மரியா கொரினோ மச்சாடோவிற்கு(María Corina Machado) நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. வெனிசுலாவில் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடும் இவர் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க போராடி வருகிறார். இவர் ஒரு அரசியல்வாதி என்பதோடு கைத்தொழில் பொறியியலாளர்(Industrial Engineer) என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் 2021 ம் ஆண்டு Henrique Capriles Radonski இற்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தார்.

Read More

மெண்டேலாவின் பேரன் ஈஸ்ராயிலில் இருந்து தென் ஆப்பிரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்

தென் ஆப்ரிக்க முன்னால் ஜனாதிபதியும் நிறவெரியிற்கு எதிர்ப்பு தெரிவித்த மேண்டேளாவின் பேரன் மண்டேலா மேண்டேலா (Mandla Mandela) கடந்த தினத்தில் ஜோஹன்னஸ்பெர்க் நகரிற்கு திரும்பினார். இவர் இஸ்ரேயில் நாட்டில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார் . காஸாவிற்கு உதவி வழங்க முற்பட்டமையினால் இவர் உட்பட மேலும் பலர் கைது செய்யப்பட்டனர். இவர் Global Sumud Flotilla அமைப்பில் உள்ளதோடு இவரிற்கு முன்னர் ஸ்வீடன் சமூக செயற்பாட்டாளரான கிரேட் தன்பர்கும்(Greta Thunberg) கைது செய்யபட்டிருந்தார்.

Read More

ஜப்பானில் முதல் முதலாக பெண் ஒருவர் பிரதமராக வாய்ப்பு

ஜப்பானின் முன்னால் பொருளாதார பாதுகாப்பு அமைச்சரான சானே தகாசி (Sanae Takaichi) ஜப்பானின் முதல் பெண் பிரதமாராக தெரிவாக உள்ளதாக எதிர்வு கூறபடுகிறது. இவர் தற்போதைய ஆளும் கட்சியின் தலைவராக தெரிவாகியுள்ளதோடு. இம்மாதம் மத்தியில் ஜப்பானிய பிரதமாரக பதவியேற்பார் என எதிர்பார்க்க படுகிறது. இவர் சின்சோ அபே பிரதமர் காலத்திலும் அதற்கு முன்னரும் பல அமைச்சு பதவிகளில் கடமையாற்றிருந்தார். இவரின் தலைமை பதவியேற்பின் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி தகாசி அவர்களை ஜப்பானின் முதலாவது “பெண் பிரதமர்” என…

Read More

தலிபானியர்கள் இணையத்திற்கு பிரவேசிக்கும் வசதி துண்டிப்பு

தலிபானியர்கள் இணையத்தை பாவிப்பதை ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசு கடந்த தினத்தில் தடை செய்தது. இணையம் மூலம் பாலியல் வீடியோக்கள் மற்றும் குற்றச்செயல்கள் பரவுவதை தடுப்பதற்க்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து அந்நாட்டின் நாற்பது மில்லியன் மக்கள் உலக நாடுகளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்நாட்டின் காபுல் நகர விமான நிலைய செயற்பாடுகளும் தடைபட்டுள்ளது. பின்னர் மக்கள் எதிர்ப்பிற்கு மத்தியில் மீண்டும் இனைய வசதி ஸ்தாபிக்கபட்டுள்ளது.

Read More

“ட்ரம்ப்” இனை கொலை செய்ய முயற்சித்த நபர் குற்றவாளி என ஜூரி சபை தீர்மானம்

கடந்த வருடம் “ட்ரம்ப்” இனை அவரினது “கோல்ப்” மைதானத்தில் கொலை செய்ய முயற்சித்த ரயன் ரவுத்(Ryan Routh) குற்றவாளி என 7 பேர் கொண்ட ஜூரி சபை மூலம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனது கழுத்தினை பேனை ஒன்றினால் குத்தி தற்கொலை செய்ய முற்பட்டிருந்தார். உடனடியாக செயற்பட்ட நீதிமன்ற அதிகாரிகள் அவரினை நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றினர். ரயன் ரவுத் இலக்கமில்லாத துப்பாக்கி வைத்திருந்தமை, ட்ரம்ப்இனை கொலை செய்ய முயற்சித்தமை ஆகியவற்றிற்கு குற்றவாளியாக தீர்மானிக்கபட்ட்டார்.

Read More

பேருவில் ஜென் Z போராட்ட ஆரம்பம்

நிதி மோசடி மற்றும் ஓய்வுதிய குறைப்பு போன்ற காரணங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரு நாட்டின் லீமா நகரை பல இளைஞர், யுவதிகள் சுற்றிவளைத்துள்ளனர். ஜனாதிபதி டினா போலேர்டோவின் அரசிற்கு எதிராக Generation Z குழுவினரோடு மக்களும் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளதகா தெரிவிக்கபடுகிறது.

Read More

பலஸ்தீன ஜனாதிபதி வீடியோ அழைப்பின் மூலம் ஐ.நா வின் வருடாந்த பொதுக் கூட்டத்தினை பங்கேற்க அனுமதி

எதிர்வரும் வாரத்தில் நடைபெற இருக்கும் ஐ.நா வின் வருடாந்த பொதுக் கூட்டத்தினை பங்கேற்க எதிர்பார்த்திருந்த பலஸ்தீன ஜனாதிபதி மஹ்முத் அப்பாஸ்(Mahmoud Abbas) இன் ஐக்கிய அமெரிக்காவிற்கான பயணத்தின் விசாவினை வழங்க நிராகரிக்க அந்நாடு தீர்மானித்தது. இதனையடுத்து அவருடைய பங்கேற்பிற்கு வீடியோ அழைப்பின் மூலம் உரையாற்ற வழங்கும் தீர்மானம் 145 வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டது.

Read More

நேபாளத்திற்கு முதல் முறையாக பெண் சட்டமா அதிபர்

நேபாளத்தின் சிரேஷ்ட வழக்கறிஞரான சபித பண்டாரி (Sabita Bhandari) நேபாளத்தின் முதலாவது பெண் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னால் சட்டமா அதிபர் ரமேஷ் பதால் அந்நாட்டின் கடந்த கே.பி.ஷர்மா ஓளியின் அரசின் வீழ்ச்சியின் பின்னர் பதவி விலகியதால் வெற்றிடமான சட்டமா அதிபர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

ட்ரம்ப் ஜனாதிபதியின் நண்பனின் கொலையாளி கைது

அமெரிக்க ஜனாதிபதி டானல்ட் ட்ரம்ப்பின் நண்பனான சார்லி கார்க்(Charlie Kirk) கடந்த வாரம் துப்பாக்கிதாரி ஒருவரினால் கொலை செய்யபட்டிருந்தார். இவர் கொன்சர்வேடிவ் கட்சியின் பிரதான உறுப்பினரும் ஆவார். இவர் 2012ம் ஆண்டு ஆரம்பித்த “அமெரிக்காவின் திருப்புமுனை” (Turning Point USA -TPUSA) அமைப்பின் தலைமை நிருவாகியுமாவார். இவரினை கொலை செய்த சந்தேகநபரான 22 வயது டெயிலர் ரொபின்சன்(Tyler Robinson) தனது தந்தையால் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சார்லி கார்க் “அமெரிக்காவின் திருப்புமுனை” அமைப்பின் மூலம் பிரசித்தி பெற்றிருந்தாலும் அவர்…

Read More