
ஐரோப்பா மற்றும் அமெரிக்கா தமது நாட்டின் சமாதான பேச்சுவார்த்தையில் பங்குபெறும் என செலன்ச்கி எதிர்பார்ப்பு
யுக்ரேனிய ஜனாதிபதி வோல்டிமையர் செலன்ச்கி(Volodymyr Zelenskiy) தமது நாட்டிற்கும் ருசியாவிற்கும் இடையில் காணப்படும் யுத்தத்தினை முடிவிற்கு கொண்டு வருவதற்கான சமாதான பேச்சுவார்த்தையில் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா பங்கேற்கும் என எதிர்பார்பதாக கூறினார். அமெரிக்க புதிய ஜனாதிபதி ட்ரம்ப் உக்ரேனிய ரசிய போர் பற்றி ரசிய ஜனாதிபதியுடன் கலந்துரையாட உத்தேசித்துள்ளதாக கூறியிருந்த நிலையில் ரசிய ஜனாதிபதி புடின் அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து இவ்விடயதினை கலந்துரையாட வேண்டும் எனக்கூரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.