வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ள பங்களாதேஷ் பொதுத் தேர்தலை முன்னிட்டு, முன்னாள் பிரதமர் கலீதா சியா மீண்டும் தேர்தலில் நிற்பார் என்று பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி அறிவித்துள்ளது.
இப்போது 80 வயதாகும் கலீதா சியாவும், அவரது மகன் தரிக் ரஹ்மானும் கட்சியின் புதிய வேட்பாளர் பட்டியலில் உள்ளனர்.
கலீதா சியா 1991 முதல் 1996 வரை முதன்முறையாகவும், பின்னர் 2001 முதல் 2006 வரை இரண்டாவது முறையாகவும் நாட்டை வழிநடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்துடன், இந்த தேர்தலில் மொத்தம் 300 பிரதேசங்களில் 237 வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் கூறுகின்றன.
