இங்கிலாந்து கிரிக்கட் வீரரும் தனது நாட்டிற்கு அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவருமான ஜேம்ஸ் ஆண்டர்சன் நயிட் பதவி வழங்கி கெளரவிக்கபட்டுள்ளார். இங்கிலாந்தின் வின்சர்ட் மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் இளவரசி ஆன் இந்த பட்டத்தினை வழங்கி அவரை கெளரவித்தார். இவர் 704 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இவர் முத்தையா முரளிதரன் (800) மற்றும் சேன் வோர்ன் (708) ஆகியோரிற்கு அடுத்த அதிகூடிய டெஸ்ட் விக்கெட் பெற்றவர் என்ற வரிசையில் இருக்கின்றார்.
