இவ்வருட செந்தரவுப் புத்தக பட்டியலில் அழியும் உயிரினங்களில் ஆர்க்டிக் நீர் நாய் உட்பட அரைவாசி பறவை இனங்களும் உள்ளடங்கியுள்ளது

சர்வதேச இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு (IUCN) மூலம் வருடா வருடம் வெளியிடும் உலகின் அழிவுக்கு உட்பட்டு வரும் உயிரினங்கள் அடங்கிய செந்தரவுப் புத்தகம்( சிவப்பு தகவல் புத்தகம்) அல்லது சிவப்பு பட்டியல் இவ்வருடமும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் ஆர்க்டிக் நீர்நாய் (Arctic seals) மற்றும் 60% மான பறவை இனங்களின் தொகையானது குறைந்து வருகின்றது என கண்டறியப்பட்டுள்ளது.

பனிப்பாறைகள் உறைவதனால் ஆர்க்டிக் நீர்நாய்களின் இளைப்பாறல்,இனபெருக்கம் மற்றும் பாலூட்டல் போன்ற செயற்பாடுகளிற்கு தடை ஏற்பட்டுள்ளதால் இவற்றின் இருப்பு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அதே போன்று காடழிப்பு, விவசாயம், சூழல் மாற்றம், மற்றும் ஏனைய விலங்குகளின் பெருகுதல் அதிகரித்தமை போன்ற காரணங்களினால் பறவை இனங்களும் அழிவிற்கு உள்ளாகும் நிலையில் உள்ளதாக கண்டறியபட்டுள்ளது.

இந்த செந்தகவல் பட்டியலில் உள்ளடங்கி இருந்த பச்சை கடல் ஆமை (green sea turtle) இனம் அழிவிற்கு உள்ளாகும் நிலையில் இருந்து மீண்டுள்ளது. இந்த அழிவிற்கு உட்படகூடிய இனங்களை முன்கூட்டியே இனங்கண்டு இவ்வாறு பட்டியல் படுத்துவதன் மூலம் அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை உணரக்கூடியதாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *