இரு தடவை சந்திரனிற்கு சென்ற ஜிம் லொவெல் காலமானார்

1928 வருடம் பிறந்த ஜிம் லொவெல் தனது 97ம் வயதில் காலமானார். இவர் சந்திரனிற்கு இரு தடவை பயணித்த விண்கல வீரராவார்.

இவர் 1968 வருடம் செலுத்தப்பட்ட அப்பலோ 8 இலும் 1970 வருடம் செலுத்தப்பட்ட அப்பலோ 13 விண்கலத்திலும் பயணித்திருந்தார். ஆனால் இவர் சந்திரனில் காலடி எடுத்து வைக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது.

மேலும் விண்வெளியிற்கு நான்கு முறை பயணித்த முதலாம் விண்கல வீரர் ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *