அமெரிக்காவின் 1977 தொடக்கம் 1981 வரை ஜனாதிபதியாக இருந்த ஜிம்மி கார்டர்(Jimmy Carter) அவரது 100 ம் வயதில் காலமானார். இவர் அதிக காலம் உயிர்வாழ்ந்த அமெரிக்க ஜனாதிபதிகளில் முதலாவது முன்னாள் ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
*ஜிம்மி கார்டர் அமெரிக்காவின் 39 வது ஜனாதிபதியாவார்.
*தனது ஆட்சியின் போது 1978 இல் எகிப்து மற்றும் இஸ்ரேல் இற்கு இடையில் சமாதான பேச்சுவார்த்தையை மேற்கொண்டு அது 1979 இல் வெற்றியை கண்டது.
*1979 ம் ஆண்டு டெஹ்ரானில் இஸ்லாமிய புரட்சி காரணமாக அமெரிக்க உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் 444 நாட்கள் சிக்கியிருந்த 52 அமெரிக்க அலுவலகர்களை விடுவித்துக்கொள்வதற்கு கலந்துரையாடி செயற்பட்டவர்.
* 1980 ம் ஆண்டு அவரது இரண்டாம் தவணையின் போது அமெரிக்கர்களை விடுவித்துக்கொள்ளும் செயற்பாட்டில் ஏற்பட்ட தவரினால் 8 பேர் பலியாகினர். இதனால் இதன்போது அவரின் மீதான மக்களின் கவர்ச்சி குறைவடைந்ததோடு ரோனல்ட் ரேகன்(Ronald Reagan) 1981 இல் ஜனாதிபதியானார். இவரின் பதவியேற்பின் ஒரு நிமிடத்தின் பின்னர் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
*இவர் தனது தோல்வியின் பின்னர் 1982 இல் உலக சமாதானத்தினை நிலைநாட்டும் நோக்குடன் கார்டர் மையத்தினை (Carter Center) நிறுவினார்
*2002 ம் ஆண்டு உலக சமாதான நோபெல் பரிசை பெற்றார்.
*2003 ம் ஆண்டு முன்னால் ஜனாதிபதி ஜோர்ஜ் டப்ளிவ் புஷ் இன் ஈராக் மீதான படையெடுப்பை வன்மையாக கண்டித்தார். அமெரிக்காவின் இஸ்ரேயல் மீதான தலையிடலை 2006 ம் ஆண்டு கண்டித்ததோடு “Palestine: Peace Not Apartheid.” எனும் புத்தகத்தையும் வெளியிட்டார்.