ஹன்கேரியாவை பிறப்பிடமாக கொண்ட 103 வயதான அக்னஸ் கலேடி (Agnes Keleti) காலமானார். இவர் ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாவதோடு யுதர்களுக்கு எதிராக இடம்பெற்ற பாரிய மனித இனப் படுகொலைகளில் இருந்து தப்பியவராவார்.
இவர் இறக்கும் வரையில் மிக அதிக வருடங்கள் உயிர்வாழ்ந்த ஒலிம்பிக் வீராங்கனையாக சாதனை படைத்ததோடு, அவரின் 104ம் பிறந்த தினத்திற்கு ஒரு வாரம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
*இவர் 1940ம் ஆண்டு ஹங்கேரியன் ஜிம்னாஸ்டிக் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
*1941ம் ஆண்டு இவர் யுத இனத்தவர் என்பதால் போட்டிகளில் பங்குபெறுதல் தடை செய்யப்பட்டது.
*பின்னர் இரண்டாம் உலக போர் முடிவின் பின் 1945 ம் ஆண்டு மீண்டும் போட்டிகளில் கலந்து கொண்டார்.
*இவர் 5 ஒலிம்பிக் தங்க பதக்கங்கள் உள்ளடங்கலாக மொத்தம் 10 பதக்கங்களை வென்றுள்ளார்.