ஐரோப்பாவிற்கு யுக்ரேன் ஊடாக குழாய் வழியே சென்ற ரசியாவின் எரிவாயு இனிமேல் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. யுக்ரேன் உடனான ஒப்பந்தம் 2019 ம் ஆண்டு முடிவடைந்த நிலையில் இந்த ஊடுகடத்தல் 2025 ம் ஆண்டு ஜனவாரி மாதத்தில் இருந்து நிறுத்தபட்டுள்ளது.
ரசியாவின் அந்நிய நாடுகள் மீதான தலையீட்டின் காரணமாக யுக்ரேன் ரசியாவின் எரிவாயு கொள்வனவு செய்வதை 2015ம் ஆண்டு தொடக்கம் நிறுத்தி இருந்தது. இது ரசியா கிறிமியா நாட்டினை தன்னுடன் இணைத்து கொண்டதன் பின்னராகும்.
*பாதிப்படையும் நாடுகள் – ஐரோப்பிய மற்றும் நேட்டோ அங்கத்துவ நாடான ஸ்லோவேகியா, ஐரோப்பிய அங்கத்துவம் அற்ற மோல்டோவா
*பாதிக்கபடாத நாடுகள்- மத்திய ஐரோப்பிய நாடுகளான சேர்பியா, ஹங்கேரி ஆகிய நாடுகளிற்கு ரசியாவிடம் இருந்து துர்க்கி வழியாக நிலக்கீழ் குழாய்கள் மூலம் எரிவாயு கிடைக்கின்றது.