z-தலைமுறையின் போராட்டத்தின் பின்னர் மடகஸ்காரில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக அந்நாட்டின் ஜனாதிபதி அன்ரி ரஜோளினா (Andry Rajoelina) தனது பதவியை விட்டு நாட்டில் இருந்து வெளியேறி இருந்தார். இதனையடுத்து அந்நாட்டின் இராணுவம் ஆட்சியை தன் வசம் எடுத்ததோடு அரச நிறுவனங்களின் செயற்பாட்டினை நிறுத்தியது.
இதனையடுத்து மடகஸ்கர் இராணுவம் அடுத்த இரு வருடங்களுக்கு ஆட்சி மேற்கொள்வதாக அறிவித்துள்ளது. இதற்கு z-தலைமுறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு ஐநா, மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் இந்த முடிவை எதிர்த்துள்ளது. இராணுவ விசேட அதிரடி படையின் தலைவர் மைக்கல் ரன்டியாநிரான (Michael Randrianirina) இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். இந்த இராணுவ ஆட்சியானது மடகஸ்கார் பிரான்சில் இருந்து சுதந்திரம் பெற்றதை அடுத்து மூன்றாவது தடவையாக சந்திக்கும் இராணுவ ஆட்சி என தெரிவிக்க படுகிறது.
