பேருவின் தலைநகரிற்கு அவசரகால பிரகடனம்

தொடர்ந்து பேருவில் இடம்பெற்ற பதற்ற நிலைமையினை அடுத்து அந்நாட்டின் முன்னால் ஜனாதிபதி டினா போலறுட்(Dina Boluarte) பதவி நீக்கப்பட்டு 38 வயதான ஜோஸ் ஜெரி (José Jerí) ஜனாதிபதியாக பதவியேற்றார். பேருவின் முதல் பெண் ஜனாதிபதியான டினா போலறுட் 2022ம் வருடம் ஜனாதிபதியாக பதவியேற்றதோடு அவருடைய காலப் பகுதியில் இடம்பெற்ற பண சுத்திகரிப்பு மற்றும் ஊழல்கள் காரணமாக நாட்டில் தொடர்ந்தும் கிளர்ச்சிகள் ஏற்பட்ட வண்ணம் இருந்தது. அத்தோடு நாட்டினுள் இடம்பெற்ற குற்ற செயல்களை தடுக்கவும் அவரின் ஆட்சி தோல்வியடைந்தது. இதற்கு அமைய அவரினை அந்நாட்டின் காங்கிரஸ் பதவி நீக்கியது.

முன்னால் ஜனாதிபதி டினா போலறுட் 2022ம் வருடம் இதே முறையால் அந்நாட்டு காங்கிரசினால் அதற்கு முன்னைய ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ (Pedro Castillo) தனது இரண்டாம் ஆட்சி வருடத்தில் நீக்கப்பட்டு பதவியேற்றிருந்தார் என்பது குறிப்பிட தக்கது.

புதிய இடைக்கால ஜனாதிபதி ஜோஸ் ஜெரி பேருவின் தலைநகர் லிமாவிற்கு 30 நாள் அவசரகால நிலைமையினை அறிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியை பதவி விலகுமாறு Gen-Z குழுவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனையடுத்தே இந்த அவசரகால நிலைமை பிரகடன படுத்த பட்டுள்ளது. முன்னால் ஜனாதிபதி டினா போலறுட் கடந்த மார்ச் மாதம் அவசரகால நிலைமையினை பிரகடன படுத்தி இருந்ததோடு அதன் மூலம் குற்ற செயல்கள் குறைவடையவில்லை என்பது குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *