பிரேசில் நாட்டின் முன்னால் ஜனாதிபதி ஜயிர் போல்செனாரோ(Jair Bolsonaro) 2023 ம் ஆண்டு வெற்றி பெற்ற லூலா சில்வாவின்(Luiz Inácio Lula da Silva) முடிவினை மாற்ற முயற்சி செய்ததாக நிறுபிக்கபட்டு அந்நாட்டு நீதிமன்றம் போல்செனாரோவினை வீட்டு காவலில் வைத்தது.
கடந்த மாதம் போல்செனாரோ நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட கட்டுபாடுகளை மீறியதால் இந்த வீட்டு காவல் முடிவு விடுக்கப்பட்டுள்ளது.
போல்செனாரோ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நெருங்கிய தொடர்பு உடையவர் என்பதோடு மேற்படி நீதிமன்ற நடவடிக்கைக்கு எதிராக பிரேசிலுக்கு 5௦% வரி அறவிட அமெரிக்கா தீர்மானித்துள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
