நம்பிக்கையில்லா பிரேரணையின் 24 மணித்தியாலத்திற்கு பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தனது நண்பனான செபஸ்தியன் லேகொர்னு (Sébastien Lecornu) வை பிரான்சின் இரு வருடங்களில் தெரிவான 5 வது பிரதமராக முன் மொழிந்துள்ளார்.
39 வயதான லேகொர்னு பிரான்சின் பாதுகாப்பு அமைச்சராக கடைமயாற்றியிருந்தார்.
இவரிற்கு முன்னதாக பயொரு (Bayrou) பிரான்ஸ் பிரதமரக கடமையாற்றியிருந்தார். பிரான்சு பாராளுமன்றத்தில் 3 பிரிவுகள் காணப்படுவதோடு மக்ரோணிற்கு பெரும்பான்மை இன்மையே இந்த அரசியல் தடுமாற்றத்திற்கு காரணமாகும். இதனால் பல தடவை மக்ரோணிற்கு பிரதமர்களை மாற்ற நேரிட்டது.
முன்னால் பிரதமர் லேகொர்னு அடுத்த வருடத்திற்கு முன்வைத்த வரவு செலவு திட்டத்தில் நலன்புரியிற்கான பாரிய நிதி குறைக்கப்பட்டுள்ளது என்பதும் வேறு சில காரணிகளாலும் வரவு செலவு திட்டம் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.