எதிர்வரும் வாரத்தில் நடைபெற இருக்கும் ஐ.நா வின் வருடாந்த பொதுக் கூட்டத்தினை பங்கேற்க எதிர்பார்த்திருந்த பலஸ்தீன ஜனாதிபதி மஹ்முத் அப்பாஸ்(Mahmoud Abbas) இன் ஐக்கிய அமெரிக்காவிற்கான பயணத்தின் விசாவினை வழங்க நிராகரிக்க அந்நாடு தீர்மானித்தது.
இதனையடுத்து அவருடைய பங்கேற்பிற்கு வீடியோ அழைப்பின் மூலம் உரையாற்ற வழங்கும் தீர்மானம் 145 வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டது.