நைஜீரியாவின் நாம்தி காணுவிற்கு ஆயுள் தண்டனை

நைஜீரியாவில் பெரும் கவனம் ஈர்த்த வழக்கில், பிரிவினைவாத இயக்கத் தலைவர் நாம்தி காணுவுக்கு(Nnamdi Kanu) ஏழு பயங்கரவாத குற்றச்சாட்டுகளில் நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

தனது சொந்த மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று கோரி செயல்பட்டு வந்த IPOB – Indigenous People of Biafra அமைப்பை நிறுவிய காணு, தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட வன்முறை, கொலைகள் மற்றும் பொதுமக்கள் வாழ்க்கையை முடக்கிவைத்த “வீட்டிலேயே இருங்கள்” உத்தரவுகளுக்கு காரணமாக பாதுகாப்பு அமைப்புகளால் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். அரச கட்டிடங்கள் மீது குண்டு தாக்குதல் நடத்த கையேடு வழங்கியதாகவும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதி ஜேம்ஸ் ஓமொட்டோஷோ தீர்ப்பளிக்கும் போது, “சுய நிர்ணயத்தை கோருவது அரசியல் உரிமை தான்” என்றாலும், “அது நைஜீரிய அரசியலமைப்பில் சொன்னபடி செய்யப்படாவிட்டால் அது சட்டத்திற்கு எதிரானது” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *