கடந்த சில நாட்களாக நேபாளத்தில் காணப்பட்ட மக்கள் போராட்டத்திற்கு பின்னர் அந்நாடு இராணுவ கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டுவரப்பட்டது. இந்த போராட்டமானது ஜென் Z போராட்டம் என அழைக்கபட்டதோடு (Gen Z protest) அந்நாட்டின் ஊழல், வாரிசு அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களை முடக்கல் போன்ற காரணிகளால் அந்நாட்டு இலைஞர்கள் மற்றும் பொது மக்களால் ஆராம்பிக்கபட்டிருந்தது. இதன்போது ஐம்பதிற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு அந்நாட்டின் பாராளுமன்றம், உட்பட பல அரச கட்டிடங்கள் தீக்கிரையாக்கபட்டது . சிறைச்சாலை கைதிகள் 54 பேர் தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து அந்நாட்டின் கட்டுபாட்டை இராணுவம் தலையிட்டு அடக்கியது.
இதனை அடுத்து இடைக்கால அரசு ஒன்றினை நிறுவி அதில் பிரதமராக சுசிலா கார்க்கி அவர்களை பதவியேற்குமாறு போராட்ட குழுவினர் கோரியுள்ளனர் என தெரிவிக்கபடுகிறது. சுசிலா கார்க்கி நேபாளத்தின் முதல் பெண் பிரதம நீதியரசராக கடமையாற்றி இருந்தவர் என்பதோடு அவர் 79 வயதுடையவர் என்பதும் குறிப்பிட தக்கது.
அவர் பதவியேற்ற உடனே அந்நாட்டு பாராளுமன்றத்தை கலைத்தார். அத்தோடு கத்மண்டு நகரம் மீண்டும் திறக்கபட்வுள்ளது.