நான்கு நாட்களாக தொடர்ந்த தாய்லாந்து -காம்போஜியா இடையிலான போரானது மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் தலைமையில் மலேசியாவின் க்வலாலம்பூரில் அமைந்துள்ள பிரதமர் இல்லத்தில் தாய்லாந்தின் கடமையில் உள்ள பிரதமர் பும்தம் விஜெசாய் மற்றும் காம்போஜிய ஹுன் மனெட் ஆகியோர் யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு கைச்சாத்திட்டனர்.
காலனித்துவ காலத்தில் இருந்து தொடரும் இந்த போரானது இடையிடையே உக்கிரமாவதோடு யுநெஸ்கோ உலக புராதன ஸ்தலமான ப்றேஹா விஹாரா(Preah Vihear Temple) விகாரையை மையமாக கொண்டு யுத்தம் தொடர்ந்துள்ளதோடு கடந்த மே மாதம் காம்போஜிய இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னர் மீண்டும் யுத்தம் ஆரம்பித்துள்ளது
