ஆபிரிக்காவின் மீதான பிரான்சின் இராணுவ ஆட்சியை எதிர்க்கும் போக்கின் விளைவாகவே ஐவரி கோஸ்ட் அந்த வரிசையில் புதிதாக இணைந்துகொண்ட மேற்கு ஆப்ரிக்க நாடுகளின் ஒன்றாக அமைகிறது. அந்நாட்டின் ஜனாதிபதி Alassane Ouattara தனது வருட இறுதி உரையில் இந்த வெளியேறல் இவ்வருட ஜனவரி முதல் இடம்பெறும் என தெரிவித்தார்.
கடந்த இரு வருடங்களுள் ஏற்பட்ட பிரான்சு எதிர்ப்பு காரணமாக மாலி,புர்கினோ பாஸோ, நைகர் உள்ளடங்கலாக பல மேற்கு ஆப்ரிக்க நாடுகள் பிரான்சினை வெளியேற்றியது.
அண்மையில் செனஹல், செட்(Senegal, chad) ப்ரான்சினை வெளியேறுமாறு கோரியிருந்தன.
தற்போது பிரான்சின் இராணுவம் டிஜோபவுடி, கபொன(Djibouti,Gabon) ஆகிய நகரங்களில் மாத்திரம் தங்கியுள்ளது.