கடந்த வருடம் “ட்ரம்ப்” இனை அவரினது “கோல்ப்” மைதானத்தில் கொலை செய்ய முயற்சித்த ரயன் ரவுத்(Ryan Routh) குற்றவாளி என 7 பேர் கொண்ட ஜூரி சபை மூலம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனது கழுத்தினை பேனை ஒன்றினால் குத்தி தற்கொலை செய்ய முற்பட்டிருந்தார். உடனடியாக செயற்பட்ட நீதிமன்ற அதிகாரிகள் அவரினை நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றினர்.
ரயன் ரவுத் இலக்கமில்லாத துப்பாக்கி வைத்திருந்தமை, ட்ரம்ப்இனை கொலை செய்ய முயற்சித்தமை ஆகியவற்றிற்கு குற்றவாளியாக தீர்மானிக்கபட்ட்டார்.