கடந்த 2023ம் ஆண்டு டைட்டானிக் கப்பலின் எச்சங்களை ஆராய கடலிற்கு அடியில் சென்ற டைடன் நீர்மூல்கி கப்பல் விபத்துக்குள்ளானது. இதன்போது அந்த நீர்மூல்கி கப்பலினை உருவாக்கிய ஓஷன் கேட்(OceanGate) நிறுவனத்தின் தலைமை நிருவாக அதிகாரியான ஸ்டாக்டன் ரஷ்(Stockton Rush) உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து ஏற்பட்டமை மர்மமாக காணப்பட்டதோடு தற்போது இந்த விபத்து தொழினுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விபத்தினை அடுத்து ஓஷன் கேட் நிறுவனம் அனைத்து தமது செயற்பாடுகளையும் முடக்கியது. இன் நிறுவனம் Antipodes, Cyclops 1, Titan ஆகிய மூன்று படைப்புகளின் படைப்பாளி ஆகும்.
