ஜப்பானின் முன்னால் பொருளாதார பாதுகாப்பு அமைச்சரான சானே தகாசி (Sanae Takaichi) ஜப்பானின் முதல் பெண் பிரதமாராக தெரிவாக உள்ளதாக எதிர்வு கூறபடுகிறது. இவர் தற்போதைய ஆளும் கட்சியின் தலைவராக தெரிவாகியுள்ளதோடு. இம்மாதம் மத்தியில் ஜப்பானிய பிரதமாரக பதவியேற்பார் என எதிர்பார்க்க படுகிறது. இவர் சின்சோ அபே பிரதமர் காலத்திலும் அதற்கு முன்னரும் பல அமைச்சு பதவிகளில் கடமையாற்றிருந்தார்.
இவரின் தலைமை பதவியேற்பின் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி தகாசி அவர்களை ஜப்பானின் முதலாவது “பெண் பிரதமர்” என வாழ்த்தியுள்ளார். தகாசி 64 வயதான திறமையான ஆட்சியாளராக அமைவார் எனவும் ஜப்பானிய பொருளாதாரத்தினை கட்டமைப்பார் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.