சர்வதேச விண்வெளி மையத்திற்கு பொருட்கள் கொண்டு செல்ல ஜப்பான் விண்வெளி ஓடம் ஒன்றினை ஏவியது

ஜப்பான் விண்வெளி முகவர் நிலையம் மிக முக்கியமான தானியங்கி விண்வெளி ஓடம் ஒன்றினை கடந்த வாரம் ஏவியது. இதன் பிரதான நோக்கமாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு பொருட்களை கொண்டு செல்வது காணப்படுகிறது. இந்த H3 rocket ஆனது HTV-X1 விண்கலத்தில் இணைக்கப்பட்டு ஏவப்பட்டது. அதற்கமைய H3 rocket விண்வெளி ஓடம் குறித்த எல்லையில் விடுவிக்கப்பட்டு சர்வதேச விண்வெளி மையத்தினை அடைய அடையவுள்ளது.

விண்வெளி மையத்தில் தங்கி இருக்கும் ஜப்பானிய விண்வெளி வீரரான கிமியா யூய் (Kimiya Yui) இவ் விண்கலத்தினை ரோபோ கைகளை பயன்படுத்தி ஈர்க்க உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விண்கலம் விண்வெளி மையத்திற்கு ஆறு மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொண்டு சென்றுள்ளதோடு இந்த பணி முடிவடைந்த பின்னர் விண்வெளி மையத்தில் இருந்து பிரிந்து விண்வெளியில் வழம்வருவந்தன் மூலம் மேலும் சில பணிகளையும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விண்கலத்தினை ஏவிய JAXA நிறுவனத்தின் தலைவர் Hiroshi Yamakawa இந்த தருணம் மிகவும் பாரிய முன்னேற்றத்தினை வெளிக்கடுவதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *