கென்யாவின் முன்னால் பிரதமரான ரய்லா ஒடிங்கா(Raila Odinga) தனது 80வது வயதில் இந்தியாவில் காலமானார். இவர் இந்தியாவிற்கு வருகைதந்திருந்த போது ஏற்பட்ட திடீர் நிலைமையில் காலமானதோடு இவரின் பூதவுடல் கென்யாவின் தலைநகரான நைரோபியிற்கு கொண்டு செல்லப்பட்டது. இதன்போது இவரின் பூதவுடலை காண பெருந்திரளான மக்கள் கூடியதன் காரணமாக அந்நாட்டு பொலிசாரினால் கண்ணீர் புகை மற்றும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பலர் காயமடைந்தனர்.
ரய்லா ஒடிங்கா கென்யாவின் மிகவும் முக்கியமான அரசியல் பிரமுகவராவர். இவர் பல வருடங்களாக எதிர்கட்சி தலைவராகவும் இருந்ததோடு 5 தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த்ருந்தார். மூன்று வருடத்திற்கு முன்னர் நடைபெற்ற தேர்தலில் இறுதியாக தோல்வியுற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் மரணத்தினை அனுஸ்டிக்கும் முகமாக ஏழு நாட்கள் துக்க தினம் பிரகடன படுத்தபட்டுள்ளது.
