கிழக்கு திமோர் ASEAN அமைப்பில் இணைவு

தென்கிழக்கு ஆசிய ஒன்றியமான ASEAN அமைப்பில் கிழக்கு திமோர் இணைந்துள்ளது. 1990 இற்கு பின்னர் நாடாக கிழக்கு திமோர் பதிவாகின்றது. அதற்கமைய ASEAN அமைப்பின் நடைபெறும் மாநாட்டில் மற்றைய பத்து அங்கத்துவ நாடுகளுடன் கிழக்கு திமோரின் கொடியும் மேடையில் ஏற்றபட்டிருந்தது என ஊடகங்கள் தெரிவித்தன.

” இன்று வரலாறு புதுப்பிக்கப்பட்டது ” என கிழக்கு திமோர் பிரதமர் சானாஸ் குஸ்மாவோ (Xanana Gusmao) தெரிவித்தார்.

மேலும் அமெரிக்க ஜனாதிபதி இந்த மாநாட்டிற்கு கலந்துகொள்ள சமூகமளித்த போது கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே துப்பாக்கி பிரயோகம் அற்ற எல்லைக்கான ஒப்பந்தத்தினை தலைமை தாங்கி கைச்சாத்திட வைத்தார். இதன்போது காம்போடிய பிரதமர் ஹுன் மனெட் (Hun Manet) மற்றும் தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுள் (Anutin Charnvirakul) ஆகியோர் ஒப்பந்தத்தினை கைச்சாத்திட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *