ஜப்பானில் டோக்யோ நகரில் இடம்பெறும் உலக மெய்வல்லுனர் 2025 ம் வருட போட்டியின் போது 100 மீட்டர் பெண்கள் ஓட்டபோட்டியில் அமெரிக்க மெலிசா வுடன்(Elissa Jefferson-Wooden) 10.61 செக்கன்களில் போட்டியை முடிவு செய்தார். இந்த நேரமானது 100 மீட்டர் பெண்கள் ஓட்டபோட்டி வரலாற்றில் நான்காவது குறைந்த நேரமாக கருதபடுகிறது.
அதேநேரத்தில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்ட போட்டியில் ஜமைக்காவின் ஒபிளிக் செவில் (Oblique Seville) 9.77 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து 2025 ம் வருட உலக மெய்வல்லுனர் சம்பியன் பட்டத்தினை சுவீகரித்தார்.