

இரு தடவை சந்திரனிற்கு சென்ற ஜிம் லொவெல் காலமானார்
1928 வருடம் பிறந்த ஜிம் லொவெல் தனது 97ம் வயதில் காலமானார். இவர் சந்திரனிற்கு இரு தடவை பயணித்த விண்கல வீரராவார். இவர் 1968 வருடம் செலுத்தப்பட்ட அப்பலோ 8 இலும் 1970 வருடம் செலுத்தப்பட்ட அப்பலோ 13 விண்கலத்திலும் பயணித்திருந்தார். ஆனால் இவர் சந்திரனில் காலடி எடுத்து வைக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது. மேலும் விண்வெளியிற்கு நான்கு முறை பயணித்த முதலாம் விண்கல வீரர் ஆவார்.

உலக பிளாஸ்டிக் மாசு தடுப்பு மாநாடு ஜினீவாவில்
உலக பிளாஸ்டிக் மாசு தடுப்பு மாநாடு கடந்த 4ம் திகதி ஜினீவாவில் ஆரம்பமானதோடு உலகளாவிய உடன்படிக்கையும் ஏற்படுத்திக்கொள்ள உள்ளது. பிலாஸ்டிக் பாவனை பற்றி அகில உலக தேசிய கூட்டமைப்பின் தலைமை செயலாளர் மதுர் பிலிப் (Mathur Filipp) தெரிவித்தற்கு அமைய 2024 வருடம் 500 மில்லியன் டன் பிலாஸ்டிக் பாவைக்கு எடுக்கபட்டுள்ளதோடு 400 மில்லியன் டன் கழிவாக ஒதுக்கபட்டதாக தெரிவித்தார்.

பிரேசில் முன்னால் ஜனாதிபதி வீட்டுக்காவலில்
பிரேசில் நாட்டின் முன்னால் ஜனாதிபதி ஜயிர் போல்செனாரோ(Jair Bolsonaro) 2023 ம் ஆண்டு வெற்றி பெற்ற லூலா சில்வாவின்(Luiz Inácio Lula da Silva) முடிவினை மாற்ற முயற்சி செய்ததாக நிறுபிக்கபட்டு அந்நாட்டு நீதிமன்றம் போல்செனாரோவினை வீட்டு காவலில் வைத்தது. கடந்த மாதம் போல்செனாரோ நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட கட்டுபாடுகளை மீறியதால் இந்த வீட்டு காவல் முடிவு விடுக்கப்பட்டுள்ளது. போல்செனாரோ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நெருங்கிய தொடர்பு உடையவர் என்பதோடு மேற்படி நீதிமன்ற நடவடிக்கைக்கு எதிராக பிரேசிலுக்கு…

தமிழ் சினிமாவின் இன்னொரு நகைச்சுவை கலைஞர் காலமானார்
தமிழ் சினிமா உலகினை தனது நகைச்சுவை ஆற்றலினால் ஆக்கிரமித்த மதன் பாப் தனது 71ம் வயதில் காலமானார். அவர் நடித்த தெனாலி மற்றும் பிரண்ட்ஸ் திரைப்படங்கள் அவரின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்திருந்தது.

ஒரு ஓவரில் 18 பந்துகள் வீசிய ஹேஸ்டிங்
இங்கிலாந்தில் இடம்பெற்ற லெஜண்ட்ஸ் உலக கோப்பை கிரிகெட் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் இடையில் இடம்பெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா 74 இற்கு அனைத்து விக்கெட் இழந்ததோடு பாகிஸ்தான் அணியினர் துடுப்பாடிய போது முன்னால் அவுஸ்திரேலிய வேகபந்து வீச்சாளர் ஜோன் ஹேஸ்டிங்(John Hastings) 8ம் ஓவரில் செலுத்திய 18 பந்துகளில் 5 பந்துகளே சரியான பந்துகலானதோடு அதன் மூலம் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது

தாய்லாந்து -காம்போஜியா இடையில் யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்து
நான்கு நாட்களாக தொடர்ந்த தாய்லாந்து -காம்போஜியா இடையிலான போரானது மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் தலைமையில் மலேசியாவின் க்வலாலம்பூரில் அமைந்துள்ள பிரதமர் இல்லத்தில் தாய்லாந்தின் கடமையில் உள்ள பிரதமர் பும்தம் விஜெசாய் மற்றும் காம்போஜிய ஹுன் மனெட் ஆகியோர் யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு கைச்சாத்திட்டனர். காலனித்துவ காலத்தில் இருந்து தொடரும் இந்த போரானது இடையிடையே உக்கிரமாவதோடு யுநெஸ்கோ உலக புராதன ஸ்தலமான ப்றேஹா விஹாரா(Preah Vihear Temple) விகாரையை மையமாக கொண்டு யுத்தம் தொடர்ந்துள்ளதோடு கடந்த மே…

உலகின் மிகப்பெறிய அணையினை அமைக்க சீனா முடிவு
திபெத் நாட்டின் மிகப்பெறிய நதியான யாளுங் டிசங்போவினை(Yarlung Tsangpo) மறித்து உலகின் மிகப்பெரிய அணையினை சீனா அமைக்கவுள்ளது. இது 2057 kmநீளமும் , 6000m உயரமும் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது. இது 2030 ம் வருடம் திட்டம் நிறைவு செய்ய உத்தேசித்துள்ளதோடு. இதன்மூலம் 300 பில்லியன் kwh மின் உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படவுள்ளது.

பலஸ்த்தீனை தனி நாடாக ஏற்க கனடா மற்றும் பிரித்தானியா முடிவு
பலஸ்தீன் நாட்டின் தலைவர் மகமுத் அப்பாசுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் பலஸ்தீனில் தேர்தல் நடாத்துவது மற்றும் சில முற்போக்கான விடயங்களை அமுல்படுத்த ஒத்துகொன்டதை அடுத்து பலஸ்தீனை தனி நாடாக ஏற்க உள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்திருந்தார். அத்தோடு தற்போது காசாவில் நிலவும் நிலையினை கருத்தில் கொண்டு ஈஸ்ராயில் போர்நிறுத்தத்தை மேற்கொள்ளாவிடின் பலஸ்தினை தனி நாடாக ஏற்பதாக பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் அறிவித்திருந்தது. தற்போது 193 நாடுகளில் 140 நாடுகள் பலஸ்தீனை தனி நாடாக ஏற்றுக்கொண்டுள்ளன.

ஈஸ்ராயில் ஈரான் இடையிலான யுத்தத்தின் பின்னணி
1979 இற்கு முன்னர் ஈஸ்ராயில் ஈரான் இடையில் காணப்பட்ட நட்புறவு ஈரானியப் புரட்சிக்கு முன்னர் , இஸ்ரேலும் ஈரானும் மூலோபாய நட்பு நாடுகளாக இருந்தன.ஷா முகமது ரெசா பஹ்லவியின்(Shah Mohammad Reza Pahlavi) கீழ் ஈரான், இஸ்ரேலை அங்கீகரித்த முதல் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் ஒன்றாகும்.இரு நாடுகளும் பொருளாதார மற்றும் இராணுவ ஒத்துழைப்பைக் கொண்டிருந்தன, குறிப்பாக எண்ணெய் மற்றும் ஆயுதத் துறையில். 1979 இஸ்லாமியப் புரட்சியுடன் ஏற்பட்ட மாற்றம் இஸ்லாமியப் புரட்சி அப்போதைய தலைவர் ஷாவைத் தூக்கியெறிந்து…

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா தமது நாட்டின் சமாதான பேச்சுவார்த்தையில் பங்குபெறும் என செலன்ச்கி எதிர்பார்ப்பு
யுக்ரேனிய ஜனாதிபதி வோல்டிமையர் செலன்ச்கி(Volodymyr Zelenskiy) தமது நாட்டிற்கும் ருசியாவிற்கும் இடையில் காணப்படும் யுத்தத்தினை முடிவிற்கு கொண்டு வருவதற்கான சமாதான பேச்சுவார்த்தையில் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா பங்கேற்கும் என எதிர்பார்பதாக கூறினார். அமெரிக்க புதிய ஜனாதிபதி ட்ரம்ப் உக்ரேனிய ரசிய போர் பற்றி ரசிய ஜனாதிபதியுடன் கலந்துரையாட உத்தேசித்துள்ளதாக கூறியிருந்த நிலையில் ரசிய ஜனாதிபதி புடின் அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து இவ்விடயதினை கலந்துரையாட வேண்டும் எனக்கூரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.